*வரலாற்றில் இன்று*
*05 அக்டோபர் 2026-திங்கள்*
*========================*
816 : ரோமப் பேரரசராக லூயிஸ் பியஸ் முடிசூடினார்.
1450 : பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1780 : வேலுநாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு நடைபெற்றது.
1789 : பிரெஞ்சுப் புரட்சி :- பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வெர்சாய் அரண்மனை நோக்கி அணி திரண்டு சென்றனர்.
1793 : பிரெஞ்சுப் புரட்சி :- பிரான்ஸில் கிறிஸ்தவம் தடை செய்யப்பட்டது.
1795 : இலங்கையின் மன்னார் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.
1799 : ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1838 : கிழக்கு டெக்ஸாஸில் 18 குடியேறிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1864 : வங்காள விரிகுடாவில் உருவான கடும் புயல் மற்றும் சுனாமியால் கல்கத்தா நகரில் கடல் நீர் புகுந்ததில் 60,000 பேர் உயிரிழந்தனர்.
1905 : ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.
1910 : போர்ச்சுகலில் நடைபெற்ற புரட்சியால் அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்து குடியரசாகியது.
1911 : ஹாங்காங்கில் கவுலூன் – குவாங்சோவ் ரயில் சேவை ஆரம்பமானது.
1915 : முதலாம் உலகப் போர் :- பல்கேரியா போரில் இறங்கியது.
1930 : பிரிட்டிஷ் விமானந்தாங்கி கப்பல் ஆர் -101 தனது முதலாவது பயணத்தில் இந்தியா செல்லும் வழியில் பிரான்ஸில் விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.
1938 : நாஜி ஜெர்மனியில் யூதர்களின் பாஸ்போர்ட் செல்லுபடியற்றதாக்கப்பட்டன.
1942 : ரஷ்யாவின் டப்னோவில் 5,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் :- வேக் தீவில் 98 அமெரிக்க போர்க் கைதிகள் ஜப்பான் படைகளால் கொல்லப்பட்டனர்.
1944 : பிரான்ஸில் பெண்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
1947 : பஞ்சத்தில் வாடும் ஐரோப்பியருக்காக தானியங்கள் சாப்பிடுவதை குறைக்குமாறு தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி ட்ரூமன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டார்.
1948 : துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் உயிரிழந்தனர்.
1951 : சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் ஆரம்பமானது.
136 நாட்களுக்கு பிறகே நடந்து முடிந்தது.
1954 : கரீபியனில் வீசிய சூறாவளியில் ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.
1962 : முதலாவது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான டாக்டர் நோ பிரிட்டனில் வெளிவந்தது.
1970 : அமெரிக்காவில் பொது ஒளிபரப்பு சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1974 : இங்கிலாந்தில் ஐரிஷ் குடியரசு ராணுவத்தினர் மதுபானசாலையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
65 பேர் காயமடைந்தனர்.
1978 : ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழர் தேசத்தினை தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
1982 : ஜப்பானில் சோனி நிறுவனத்தால் 5 சென்டிமீட்டர் திரை கொண்ட டெலிவிஷன் விற்பனைக்கு வந்தது.
1987 : விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி இறந்தனர்.
1989 : கேரளாவைச் சேர்ந்த எம்.பாத்திமா பீவி உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
1991 : இந்தோனேஷியாவில் ராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
1999 : மேற்கு லண்டனில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர்.
2008 : கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.
2011 : மீகாங் ஆற்றில் இரண்டு சீன சரக்கு படகுகள் கடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்.

