வரலாற்றில் இன்று
06 ஜூலை 2026-திங்கள்
========================

1044 : ரோமப் பேரரசர் மூன்றாம் ஹென்றி ஹங்கேரி மீது படையெடுத்தார்.

1189 : முதலாம் ரிச்சர்ட் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.

1483 : மூன்றாம் ரிச்சர்ட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1557 : இங்கிலாந்தின் முதலாம் மேரியின் கணவர் இரண்டாம் பிலிப் மன்னர், பிரான்சுடன் போர் புரிவதற்காக டோவர் துறையில் இருந்து புறப்பட்டார்.
மேரி தனது கணவரைப் பின்னர் பார்க்கவில்லை.

1560 : ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

1630 : முப்பதாண்டுப் போர் :- நான்காயிரம் ஸ்வீடன் படையினர் ஜெர்மனியின் பொமரேனியா நகரை அடைந்தனர்.

1785 : டாலர் அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1854 : அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் முதலாவது மாநாடு
மிக்சிகனில் நடைபெற்றது.

1865 : அமெரிக்காவில் தி நேஷன் பத்திரிகையின் முதல் இதழ் வெளியிடப்பட்டது.

1885 : லூயி பாஸ்டியர் தான் கண்டுபிடித்த வெறிநாய்க்கடி தடுப்பூசி மருந்தை 9 வயது சிறுவனில் வெற்றிகரமாக சோதனை செய்தார்.

1889 : புகைப்படம் பதிப்பிக்கப்பட்ட முதல் போஸ்ட் கார்ட் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

1892 : தாதாபாய் நவ்ரோஜ் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1893 : அயோவாவின் பொமெரோய் நகரில் ஏற்பட்ட சூறாவளியில் 71 பேர் உயிரிழந்தனர்.

1924 : பிரேஸிலில் அரசை எதிர்த்து நடந்த பெரும் கலவரங்களில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1935 : சிங்கப்பூரின் தமிழ் நாளிதழ் தமிழ் முரசு ஆரம்பிக்கப்பட்டது.

1939 : ஜெர்மனியில் இருந்த கடைசி யூத தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

1944 : அமெரிக்காவில் ஹார்ட்பர்ட் நகரில் சர்க்கஸ் அரங்கில் ஏற்பட்ட பெரும் தீயில் சிக்கிய 168 பேர் உயிரிழந்தனர்.
700 பேர் வரை காயமடைந்தனர்.

1947 : சோவியத் ஒன்றியம் ஏகே 47 ரக துப்பாக்கிகளை தயாரிக்க ஆரம்பித்தது.

1956 : சிங்களம் இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது.

1959 : இந்தியாவில் முதல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்தது.

1952 : இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவை கொலை செய்த குற்றத்திற்காக சோமா ராம தேரர் என்ற பௌத்த துறவி தூக்கிலிடப்பட்டார்.

1954 : மலாவி பிரிட்டனிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1966 : மலாவி குடியரசாகியது

1967 : நைஜீரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1975 : கொமொரோஸ் பிரான்ஸிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1982 : கேரளாவில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

1988 : வட கடலில் எண்ணெய் அகழ்வு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 167 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1989 : டெல் அவீவ் – ஜெருசலேம் பேருந்து ஒன்றைக் கைப்பற்றிய பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் உறுப்பினர் ஒருவர் அதனை குன்றின் மீது மோத வைத்ததில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

2006 : 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின்போது மூடப்பட்ட சிக்கிமையும் திபெத்தையும் இணைக்கும் நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

2013 : நைஜீரியாவில் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

போயிங் 777 விமானம் சான்பிரான்சிஸ்கோ பன்னாட்டு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
181 பேர் காயமடைந்தனர்.

கனடாவின் கியூபெக்கில் எண்ணெய் ரயில் ஒன்று தடம் புரண்டு வெடித்ததில் 47 பேர் உயிரிழந்தனர்.
நகரின் மத்தியப் பகுதியில் 30 கட்டிடங்கள் சேதமடைந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

You missed