இதுதான் சமூக ஊடகங்களின் பலம்…

ராஜஸ்தானில் உள்ள பிச்சிவாரா காவல் நிலையத்தில் முதியவர் ஒருவர் புகார் அளிக்க வருகிறார். அங்கு அவர் ரீனா கார்க் என்ற பெண் போலீஸ் கான்ஸ்டபிளை சந்தித்தார். ஆனால், முதியவரின் புகாரில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அத்தோடு எந்த மரியாதையும் இல்லாமலும்  நடந்து கொண்டார்.

முதியவரின் வயதை மதிக்காமல், கான்ஸ்டபிள் தனது இரண்டு கால்களையும் மேஜை மீது வைத்துகொண்டார். ஒரு வயதான நபர் என்ற சாதாரண மரியாதை கூட இல்லாமல் போலீஸ் அதிகாரியின் நடத்தை இருந்தது.

இந்த நேரத்தில், காவல் நிலையத்தில் இருந்த ஒருவர் அந்தக் காட்சியை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. பெண் அதிகாரிக்கு எதிராக பலமான கண்டனம்  எழுந்தது.

இது வைரலானதால், ராஜஸ்தான் காவல்துறை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டியதாயிற்று. கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.”

உண்மையில் இந்த சம்பவத்தில் சமூக ஊடகங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் அந்த ஏழைக்கு நீதி கிடைத்திருக்குமா?

நமது காவல் துறையின் சிலர்  சாமானியர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு தெளிவாக உள்ளது.

மக்களுக்கு சேவை செய்வதே காவல்துறையின் கடமை. ஆனால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய சில அதிகாரிகள் அவர்களிடம் எப்படி கர்வமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை இந்த வைரல் படம் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =

You missed