*வரலாற்றில் இன்று*
*07 ஜூலை 2026-செவ்வாய்*
*========================*
1124 : சிலுவைப்போர் வீரர்கள் லெபனானின் டைர் நகரைக் கைப்பற்றினர்.
1456 : ஜோன் ஆப் ஆர்க் குற்றமற்றவள் என அவர் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
1543 : பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர்.
1575 : இங்கிலாந்துக்கும், ஸ்காட்லாந்துக்கும் இடையே கடைசி பெரும்போர் ரீட்ஸ்வயர் என்ற இடத்தில் நடைபெற்றது.
1770 : ரஷ்யப் பேரரசுக்கும் ஒட்டோமான் பேரரசுக்கும் இடையே லார்கா என்ற இடத்தில் போர் நடைபெற்றது.
1799 : பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
1807 : பிரான்ஸ், புரூஷியா, ரஷ்யா ஆகியவற்றுக்கிடையே அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
நான்காவது கூட்டமைப்பு போர் முடிவுக்கு வந்தது.
1834 : நியூயார்க்கில் அடிமை முறைக்கு எதிரானவர்கள் மீதான நான்கு நாள் வன்முறைகள் ஆரம்பமானது.
1846 : அமெரிக்கப் படைகள் மாண்டரே, யெர்பா புவெனா ஆகியவற்றைக் கைப்பற்றின.
கலிபோர்னியாவைக் கைப்பற்றும் திட்டம் ஆரம்பம் ஆனது.
1865 : ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பாக நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
1896 : இந்தியாவில் முதன்முறையாக பம்பாயில் வணிகரீதியான திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1915 : 157 பயணிகளுடன் சென்ற டிராலி, ஒன்டாரியோ குவீன்ஸ்டன் நகரில் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.
1916 : வெலிங்டனில் நியூஸிலாந்து தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டது.
1928 : துண்டுகள் ஆக்கப்பட்ட ரொட்டிகள் முதன்முறையாக மிசூரியில் விற்பனைக்கு வந்தது.
1937 : மார்கோ போலோ பாலம் சம்பவம் இரண்டாம் சீன – ஜப்பான் போர் ஆரம்பிக்க காரணமாக இருந்தது.
பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் முதல் தடவையாக பரிந்துரைக்கப்பட்டது.
1941 : ஐஸ்லாந்தில் அமெரிக்கப் படைகள் தரை இறங்கின.
பிரிட்டன் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
இரண்டாம் உலகப்போர் :- பெய்ரூட் நகரம் பிரிட்டன் படைகள் வசம் வந்தது.
1942 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் யூ 701 நீர்மூழ்கிக் கப்பல் அழிக்கப்பட்டது.
1953 : சே குவேரா பொலிவியா, கோஸ்டாரிகா, நிகரகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் பயணங்களை ஆரம்பித்தார்.
1959 : வெள்ளிக் கோள் ரெகுலஸ் விண்மீனை மறைத்தது.
இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.
1969 : கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
1976 : கனடா, மாண்ட்ரீல் நகரில் 21-வது ஒலிம்பிக் பந்தயம் இரண்டாம் எலிசபெத் ராணியால் துவக்கி வைக்கப்பட்டது.
1978 : சாலமன் தீவுகள் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.
1980 : ஈரானில் இஸ்லாமியச் சட்ட முறைமை அமலுக்கு வந்தது.
லெபனான் உள்நாட்டுப் போர் :- 83 புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர்.
1981 : கள்ளச்சாராயம் அருந்தியதில் பெங்களூரிலும், மைசூரிலும் 350 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
1985 : போரிஸ் பெக்கர் (வயது 17) விம்பிள்டன் கோப்பையை வென்ற இளம் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1991 : ஸ்லோவேனியாவில் பத்து நாள் விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
2003 : நாசாவின் ஆப்பர்சூனிட்டி ரோவர் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
2005 : லண்டனில் நடைபெற்ற நான்கு வெவ்வேறு தற்கொலைத் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
700 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
2006 : சீனாவில் சுரங்கம் தோண்டுவதற்காக வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 43 பேர் உயிரிழந்தனர்.
2007 : புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ்மஹால் புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
முதல் லைவ் எர்த் கச்சேரி உலகம் முழுவதும் 11 இடங்களில் நடைபெற்றது.
2008 : பிரசாத் பிரா விகார் என்ற கம்போடியாவின் பதினொன்றாம் நூற்றாண்டு இந்து கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
காபூலில் இந்தியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
2012 : ரஷ்யாவின் கிராஸ்னோடரில் வெள்ளப்பெருக்கின் காரணமாக 172 பேர் உயிரிழந்தனர்.

