*வரலாற்றில் இன்று*
*06 ஆகஸ்ட் 2026-வியாழன்*
*========================*

1812 : இலங்கை விவிலிய சபை கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1819 : நார்விச் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் முதல் தனியார் ராணுவப் பள்ளியாக வெர்மான்டில் நிறுவப்பட்டது.

1825 : பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

1861 : பிரிட்டன் லாகோஸ் நகரை இணைத்துக் கொண்டது.

1862 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- அமெரிக்கக் கூட்டமைப்பின் ஆர்கன்சாஸ் போர்க்கப்பல் மிசிசிப்பி ஆற்றில் மூழ்கியது.

1890 : நியூயார்க்கில் மின்சார நாற்காலி மூலம் முதன்முதலாக வில்லியம் கிம்லர் என்ற கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1901 : ஒக்லஹோமாவின் அயோவா நிலம், வெள்ளை இனத்தவரின் குடியேற்றத்திற்கு திறந்து விடப்பட்டது.

1906 : அரவிந்த கோஷ் வந்தே மாதரம் எனும் பத்திரிகையைத் துவக்கினார்.

1914 : முதலாம் உலகப் போர் :- செர்பியா ஜெர்மனி மீதும், ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.

முதலாம் உலகப் போர் :- ஜெர்மனியின் 10 கடற்படைப் படகுகள் பிரிட்டன் கடற்படையைத் தாக்க வட கடல் நோக்கி புறப்பட்டன.

1926 : கெர்ட்ரூட் எடர்லே ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1930 : வீரகேசரி நாளிதழ் சுப்ரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்புவில் தொடங்கப்பட்டது.

1940 : எஸ்டோனியாவை சோவியத் ஒன்றியம் இணைத்துக் கொண்டது.

1944 : வார்சாவாவில் ஜெர்மனிக்கு எதிராக ஆகஸ்ட் ஒன்றில் ஆரம்பமான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
ஏராளமான ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.

1945 : இரண்டாம் உலகப்போர் :- ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா லிட்டில் பாய் எனும் அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் ஒரே நாளில் கொல்லப்
பட்டனர்.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில்
இறந்தனர்.

1952 : இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனை நகருக்கு இடம் மாற்றப்பட்டது.

1960 : கியூபாப் புரட்சி :- அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.

1961 : வஸ்தோக் -2 :- முதன் முதலாக ஒரு முழுநாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளி வீரர் கெர்மான் டீட்டோவ் பெற்றார்.

1962 : பிரிட்டனிடம் இருந்து ஜமைக்கா விடுதலை பெற்றது.

1964 : அமெரிக்கா, நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4,900 ஆண்டு பழைய மரம் வெட்டப்பட்டது.

1988 : பீகார், கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 400 பேர் உயிரிழந்தனர்.

1990 : இலங்கை, அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி எனும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

1991 : உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பெர்னர்ஸ் – லீ வெளியிட்டார்

1997 : வடகொரிய போயிங் விமானம் குவாமில் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 254 பேரில் 228 பேர் உயிரிழந்தனர்.

2001 : ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர்.

2010 : ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தினால் 71 நகரங்கள் பாதிப்படைந்தன.
255 பேர் உயிரிழந்தனர்.

2011 : ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்  சுட்டு வீழ்த்தப்பட்டதில் 30 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.

2012 : நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய்க் கோளில் தரை இறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 1 =

You missed