*வரலாற்றில் இன்று*
*20 ஆகஸ்ட் 2026-வியாழன்*
*=======================*
636 : அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றை கைப்பற்றின.
1000 : ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபனால் உருவாக்கப்பட்டது.
1191 : மூன்றாம் சிலுவைப் போர்:- 3,000 பேர் வரை சிறைப் பிடிக்கப் பட்ட சலாதீன் முஸ்லீம் படையினர்களை இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1710 : ஸார்கோஸா எனும் இடத்தில் நடந்த போரில் பிரெஞ்சுப் படையை ஆஸ்திரியப் படை முறியடித்தது.
1773 : பிரிட்டிஷ் படை தஞ்சாவூர் கோட்டையை முற்றுகையிடத் துவங்கியது .
1852 : அட்லாண்டிக் என்ற அமெரிக்க நீராவிக் கப்பல் மூழ்கியதில் 150 பேர் உயிரிழந்தனர்.
1866 : அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
1913 : பிரிட்டனில் ஹாரி பிரெர்லி என்பவரால் முதன் முதல் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வார்க்கப்பட்டது.
பிரான்ஸில் அடால்ப் பெகௌட் எனும் விமானி முதன் முதல் விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் குதித்தார்.
1914 : முதலாம் உலகப்போர் :- பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்ஸை ஜெர்மனி கைப்பற்றியது.
1917 : இலங்கையில் ஒரு ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப் பட்டது.
ஹங்கேரியில் உணவுப் பற்றாக்குறைக் காரணமாக சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
1920 : டெட்ராய்ட் வானொலி நிலையத்தில் இருந்து முதன் முதல் செய்தி அறிக்கைகள் ஒலிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது.
1920 : மலபாரில் ‘மாப்ளா’ கலவரம் ஏற்பட்டது.
1944 : இரண்டாம் உலகப்போர் :- நேசநாடுகளின் 168 போர்க் கைதிகள் ஜெர்மனியின் வதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
1944 : இரண்டாம் உலகப் போர் :- ருமேனியா மீது ரஷ்யா தாக்குதலை ஆரம்பித்தது.
1948 : இலங்கை குடியுரிமைச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் 10 லட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
1948 : கிரீஸில் நடந்தக் கம்யூனிஸ்ட் புரட்சியை அரசு அடக்கியது.
1955 : மொராக்கோவில் அட்லஸ் மலைப் பகுதியை சேர்ந்த பேர்பர் படைகள், 77 பிரெஞ்சுக் காரர்களைக் கொலை செய்தனர்.
1955 : அல்ஜீரியாவில் நடந்த கிளர்ச்சியில் 500 பேர் உயிரிழந்தனர்.
1975 : கிழக்கு தைமூரில் உள்நாட்டுப் போர் மூண்டது.
1975 : நாசா வைக்கிங் -1 என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை நோக்கிச் செலுத்தியது.
1988 : எட்டு வருடங்களாக நடந்து வந்த ஈரான்- ஈராக் போரில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
1989 : தேம்ஸ் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 51 பேர் உயிரிழந்தனர்.
1994 : இலங்கையின் 11- வது பிரதம மந்திரியாக சந்திரிகா குமாரதுங்கா பதவியேற்றார்.
1995 : உத்தரப் பிரதேசம், பிரோசாபாத் நகரில் நடைபெற்ற ரயில் விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர்.
2008 : ஸ்பெயின், மாட்ரிட் நகரில் பராஹாஸ் விமான நிலையத்தில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 172 பேரில் 154 பேர் உயிரிழந்தனர்.
2012 : வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த சிறைக் கலவரத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
2014 : ஜப்பானில் ஹிரோஷிமா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 72 பேர் உயிரிழந்தனர்.
2016 : துருக்கி, காஜியன்டெப்பில் நடந்த திருமண விருந்தில் தற்கொலை குண்டு வெடித்ததில் 54 பேர் உயிரிழந்தனர்.

