இன்று *19.08.2026 | புதன்கிழமை காலை ராஜவாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு *திரு.K.A செங்கோட்டையன்* அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தோம்.

நாமக்கல் மாவட்ட காவிரி ஆற்றில் ஜேடர்பாளையம் தடுப்பணையிலிருந்து ராஜவாய்க்காலில் விவசாயப் பாசனத்திற்காக உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்பதையும், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, ராஜவாய்க்காலில் விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என *விவசாய முன்னேற்றக் கழகம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைத்துள்ளோம்.*

நமது கோரிக்கையை ஏற்று உடனடியாக தண்ணீர் திறப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

You missed