*வரலாற்றில் இன்று*
*16 ஆகஸ்ட் 2026-ஞாயிறு*
*========================*

1513 : கினிகேட் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி பிரெஞ்சுப் படைகளை வென்றார்.

1780 : அமெரிக்கப் புரட்சிப் போர் :- தென் கரோலினாவில் கேம்டன் என்ற இடத்தில் பிரிட்டன் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றது.

1819 : இங்கிலாந்து மான்செஸ்டரில் அரசுக்கு எதிராக கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்களை குதிரைப் படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயம் அடைந்தனர்.

1841 : அமெரிக்க ஜனாதிபதி ஜான் டைலர் அமெரிக்காவின் இரண்டாவது வங்கியை அமைப்பதற்கு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்தார்.
விக் கட்சியினர் வெள்ளை மாளிகையின் முன் வரலாறு காணாத மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

1858 : அட்லாண்டிக் கடலில் தந்தி கேபிள் அமைக்கும் பணி முடிந்து விக்டோரியா மகாராணி, அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புக்கானனுக்கு முதன் முதல் செய்தி அனுப்பினார்.
எனினும் பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் சேவை நிறுத்தப்பட்டது.

1863 : நான்காண்டுகள் ஸ்பெயின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.

1869 : பராகுவேப் போர் :- சிறுவர்களைக் கொண்ட பராகுவேப் படைப் பிரிவினரை பிரேஸில் ராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

1891 : ஆசியாவிலேயே எஃகினால் ஆன முதலாவது தேவாலயம் சான் செபஸ்டியன் பேராலயம் மணிலாவில் திறந்து வைக்கப்பட்டது.

1906 : சிலியில் 8.2 ரிக்டர்  நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882 பேர் உயிரிழந்தனர்.

1920 : போலந்து-சோவியத் போர் :- சோவியத் செஞ்சேனை வார்சாவாவில் இருந்து கட்டாயமாகத் திரும்ப நேரிட்டது.

1927 : கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் இருந்து ஹவாய் ஒனலுலு வரையான விமானங்களின் பந்தயப் போட்டி ஆரம்பமானது.
போட்டியில் பங்குபெற்ற 8 விமானங்களில் 6 காணாமல் போனது.

1929 : பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன அரபுகளுக்கும், யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும்
உயிரிழந்தனர்.

1930 : ஸ்பிடில்ஸ்டிக்ஸ் என்ற முதலாவது வண்ணக் கேலிச்சித்திரத் திரைப்படம் வெளியிடப்பட்டது.

1941: கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது.

1943 : இரண்டாம் உலகப்போர்:- ஜப்பானின் தளத்தை அமெரிக்க விமானங்கள் தாக்கி அழித்தன.
இத்தாக்குதலில் 300 ஜப்பானிய விமானங்கள் அழிக்கப்பட்டன.
1,500 விமானிகள் கொல்லப்பட்டனர்.

1946 : கல்கத்தாவில் இந்து- முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பமானது.
அடுத்த 72 மணி நேரத்தில் நான்காயிரம் பேர் உயிரிழந்தனர்.

1953 : ஈரானில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக இரான் ஷா நாட்டைவிட்டு ஓடினார்.

1954 : நியூயார்க்கில் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் முதல் இதழ் வெளியிடப்பட்டது.

1960 : 82 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து சைப்ரஸ் விடுதலை அடைந்தது.

1962 : பாண்டிச்சேரி யூனியன் பிரதேசமானது.

1964 : தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1972 : மொராக்கோவில் மேற்கொள்ளப்பட்ட ராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.

1987 : அமெரிக்காவின் டெட்ராய்ட் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே ஒரு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 155 பயணிகளில் நான்கு வயது குழந்தையைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

1991 : இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இம்பால் விமான நிலையத்தை அணுகும்போது விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 69 பேரும் உயிரிழந்தனர்.

2005 : வெனிசுலாவில் மேற்கு கரீபியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 160 பேரும் உயிரிழந்தனர்.

2006 : இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர்.

2012 : தென்னாப்ரிக்காவில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் சுட்டதில் 34 பேர் உயிரிழந்தனர்.
78 பேர் காயமடைந்தனர்.

2013 : பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 61 பேர் உயிரிழந்தனர்.
59 பேர் காணாமல் போயினர்.

2015 : சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கூடிய சந்தையின் மீது படையினர் குண்டுகளை வீசியதில் 96 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் திரிகானா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்ததில் அதில் பயணம் செய்த 54 பேரும் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

You missed