*========================*

கி.மு.44 : எகிப்தின் ஏழாம் கிளியோபாட்ரா தனது மகன் சிசேரியனை இணை ஆட்சியாளனாக அறிவித்தார்.

1192 : மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்ட், சலாகுதீன் ஆகியோருக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.

1573 : அகமதாபாத் நகர் அருகே நடந்த போரில் அக்பர் குஜராத்தைக் கைப்பற்றினார்.

1642 : இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது.

1649 : காஸ்ட்ரோ என்ற இத்தாலி நகரம் போப் பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக அழிக்கப்பட்டது.

1666 : லண்டனில் ஏற்பட்ட பெரும் தீயினால் மூன்று நாட்களில் செயின்ட் பவுல் கதீட்ரல் உட்பட 10,000 கட்டிடங்கள் அழிந்தன.

1792 : பிரெஞ்சுப் புரட்சியின் போது நடைபெற்ற கலவரங்களில் மூன்று ரோமக் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட 200க்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.

1806 : சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 457 பேர் உயிரிழந்தனர்.

1856 : சீனாவின் சிங் ஆட்சிக் காலத்தில் தைப்பிங் கிளர்ச்சியில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்கள் உட்பட 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
இக்கொலைகள் அக்டோபர் வரை நீடித்தது.

1859 : எரிவாயு விளக்குகள் ஹவாயில் அறிமுகப்படுத்தப் பட்டன.

1862 : யாழ்ப்பாணத்தில் ஜாப்னா ப்ரீமேன் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை வெளியானது.

1864 : அமெரிக்க உள்நாட்டுப் போர் :- கூட்டமைப்புப் படைகள்  அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய் சேர்ந்தன.

1870 : பிரான்ஸில் செடான் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் புருஷியப் படையினர் மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் ஒரு லட்சம் பேரையும் கைது செய்தனர்.

1885 : அமெரிக்காவின் வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் சீனத் தொழிலாளர்களை தாக்கி 28 பேரைக் கொன்றனர்.
15 பேரை காயப்படுத்தினர்.
நூற்றுக்கணக்கானோர் தப்பியோடினர்.

1900 : ஜெர்மனிக்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்தி பயன்பாடு தொடங்கியது.

1917 : ஜெர்மனி நடத்திய இரவு விமானத் தாக்குதலில் 85 பிரெஞ்சு விமானங்கள் அழிக்கப்பட்டது.

1931 : முசோலினி வாடிகனுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்.

1935 : புளோரிடாவில் ஏற்பட்ட சூறாவளியினால் 423 பேர் இறந்தனர்.

1939 : இரண்டாம் உலகப் போர் :- போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாஜி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

1944 : பெல்ஜியத்தின் எமிஸி வங்கி மூடப்பட்டது.

1945 : வியட்நாம் பிரான்ஸிடம் இருந்து விடுதலையை அறிவித்து வியட்நாம் மக்களாட்சி குடியரசு என்ற பெயரில் ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.

இரண்டாம் உலகப் போர் :- பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.

ஜப்பான் கடைசி அதிகாரப்பூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் மிசூரி என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.

1946 : ஜவஹர்லால் நேரு தலைமையில் பிரதமரின் அதிகாரங்களுடன் இடைக்கால அரசு உருவானது.

1949 : சீனா, சுங்கிங் ஆற்றங்கரைப் பகுதியில் ஏற்பட்ட தீயினால் 1,700 பேர் உயிரிழந்தனர்.

1951 : பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

1957 : தென் வியட்நாம் அதிபர் நியோ தின் தியெம் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
இவரே ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட வெளிநாட்டின் முதலாவது அதிபர் ஆவார்.

1958 : அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் யெரெவான் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

சீனா, பீஜிங்கில் முதல் தொலைக்காட்சி நிலையம் துவங்கப்பட்டது.

1970 : கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை வி.வி.கிரி திறந்து வைத்தார்.

சந்திரனுக்கான அப்பல்லோ 15, அப்பல்லோ 18 ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.

1984 : பிலிப்பைன்ஸில் வீசிய கடும் புயலினால் 1,363 பேர் இறந்தனர்.
சிட்னி நகரில் இரு குழுக்களிடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டு 12 பேர் காயம் அடைந்தனர்.

1985 : ஈழப்போர் :- இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் மு. ஆலாலசுந்தரம்,
வி. தர்மலிங்கம் ஆகியோர் தமிழ் குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

1987 : டிஜிட்டல் ஒலியுடன் இணைந்த வீடியோ சிடி பிலிப்ஸ் கம்பெனியால் அறிமுகம் செய்யப்பட்டது .

1988 : இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியன வட கிழக்கு மாகாணம் என இணைக்கப்பட்டது.

1990 : மால்டோவாவின் ஒரு பகுதியான ட்ரான்ஸ்னிஸ்ட்ரியா தன்னிச்சையாக வெளியேறித் தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது.
ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கார்பசேவ் ஏற்கவில்லை.
இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

1992 : நிகரகுவாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது 116 பேர் உயிரிழந்தனர்.

1994 : பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கோக்கோ கோலா குளிர்பான விற்பனை மீண்டும் தொடங்கியது.

1996 : பிலிப்பைன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும்  இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது .

1998 : நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று விழுந்ததில் அதில் பயணம் செய்த 229 பேரும் உயிரிழந்தனர்.

2006 : ஈழப்போர் :- யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனை கடற்போரில் இலங்கை கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

2009 : ஆந்திரா, கர்னூலில் இருந்து 74 கிலோ மீட்டர் தூரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

2018 : பிரேஸிலின் தேசிய அருங்காட்சியகம் தீக்கிரையானது.
அங்கிருந்த 90% படைப்புகள் அழிந்தன.

லிபியாவின் திரிப்பொலி சிறைச்சாலையில் இருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

You missed