*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 721 கன அடியாக சரிவு. அணையில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறப்பு.

மேட்டூர் அணையில் இருந்து 20000 கனஅடி நீர் திறந்தால் மட்டுமே கடைமடைக்கு வரும். கர்நாடகா வழங்க வேண்டிய நீரை கேட்டு பெற தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்.

நேபாளத்தில் ஒரே வீட்டில் இருந்து 23 உடல்கள் மீட்பு. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 50ஆக அதிகரிப்பு.

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர்களுக்கு அஞ்சலி. உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய நேபாள மக்கள்.

ஈரான் மீது அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால் பதற்றம். அமெரிக்காவின் தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் ஈரான் எச்சரிக்கை.

அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் திடீர் திருப்பம். எம்எல்ஏவாக தொடர அனுமதிக்கக் கோரிய இசக்கி சுப்பையா மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்.

ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு சென்ற எம்எல்ஏக்களுக்கு எதுவும் கைகொடுக்கவில்லை. இசக்கி சுப்பையா மனுவை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.

இலவச மும்முனை மின்சாரத்திற்காக தட்கல் முறையில் விண்ணப்பித்த 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு. விண்ணப்பித்தவர்களிடம் வசூலித்த 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை என்ன செய்தீர்கள் என தவெக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி.

சட்டப்பேரவையில் பட்டாசு ஆலை உரிமம் தொடர்பாக காரசார விவதாம். ஆதாரம் இன்றி பேசக் கூடாது என அமைச்சர் கீர்த்தனா பேச்சுக்கு திமுக எதிர்ப்பு.

பட்டாசு கடைக்கு உரிமம் வழங்க அலைக்கழிப்பதாக மாற்றுத்திறனாளி புகார். முறையான விண்ணப்பம் கொடுத்தும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு.

மேட்டூரிலிருந்து திரும்பும் வழியில் கிராம மக்களை சந்தித்த விஜய். மூதாட்டியிடம் நலம் விசாரித்து, கூலிங்கிளாஸ் பரிசளித்து மகிழ்ந்தார்.

சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம். முதலமைச்சர் விஜய் அழைத்துப் பேசாதது ஏன் என கேள்வி.

சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்ட விவகாரம். சுற்றறிக்கை பிறப்பிக்க டி.ஜி.பி-க்கு என்ன அதிகாரம் உள்ளது? என உயர்நீதிமன்றம் கேள்வி.

தமிழ் தேசியப் போராளி தமிழரசனின் நினைவேந்தலுக்கு சென்ற பழ.நெடுமாறன் கைது. போலீசார் ஏன் இவ்வளவு கெடுபிடி செய்கிறார்கள்? என தவெக அரசுக்கு பழ.நெடுமாறன் கேள்வி.

பல்லடம் அருகே இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் வெடித்த இரு பகுதி சிறுவர்களிடையே வெடித்த கோஷ்டி மோதல். 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.

சென்னை தண்டையார்பேட்டையில் 4 ஆயிரம் ரூபாய் கட்டியவருக்கு 20 ஆயிரம் ரூபாய் வந்த மின்கட்டணம். திடீர் மின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

மணப்பாறை அருகே விமர்சையாக நடந்த எருது ஒட்டம். இலக்கை நோக்கி போட்டி போட்டு பாய்ந்த காளைகள் கண்டு உற்சாகம்.

2 மாதங்களில் ஆவணங்களை பெறாவிட்டால் கட்டடங்களுக்கு சீல். கொடைக்கானலில் ஹோம்ஸ்டே விடுதி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை.

சிவகாசி அருகே 90 சதவீதம் நிறைவடைந்த சாலை பணிகளை கிடப்பில் போட்ட தவெக அரசு. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை.

வரும் 5-ம் தேதி டெல்லியில் நடத்த இருந்த போராட்டத்தை ரத்து செய்தது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. நீட் முறைகேடுகளுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் அறிவிப்பு.

திரிணாமுல்லில் இருந்து தாவி, பாஜக ஆதரவு அணியில் இணைந்த எம்.பி. சயானி கோஷ், முதலமைச்சர் விஜயுடன் சந்திப்பு. திடீர் சந்திப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கடல்மட்டம் உயர்வால் கொல்கத்தா, மும்பை நகரங்களுக்கு ஆபத்து. லட்சக்கணக்கானோர் வீடுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக ஐ.நா. எச்சரிக்கை.

கோஷி ஆற்றில் கிடைக்கும் வழக்கத்திற்கு மாறான மீன்களை உண்ண வேண்டாம். பீகார் மக்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்.

ஜார்கண்ட்டில் சி.என்.ஜி. எரிபொருள் நிரப்பும்போது கோர விபத்து. எரிபொருள் நிரப்பும் குழாய் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

சர்க்கரை வியாபாரிகளுக்கான கையிருப்பு அளவை குறைத்தது ஒன்றிய அரசு. விலையேற்றத்தை பயன்படுத்தி பதுக்கல் அதிகரிப்பதை தடுக்க நடவடிக்கை.

எல் சால்வடார் நாட்டில் களைகட்டிய நெருப்பு பந்து திருவிழா. ஒருவர் மீது ஒருவர் நெருப்பு பந்துகளை வீசி விளையாடிய போட்டியாளர்கள்.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் வெளுத்து வாங்கிய கனமழை. மலையில் இருந்து அருவி போல கொட்டிய வெள்ளநீரில் உருண்டு விழுந்த பாறைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

You missed