*வரலாற்றில் இன்று*
*23 செப்டம்பர் 2026-புதன்*
*========================*
1641 : 1,00,000 பவுண்டு எடை கொண்ட தங்கத்துடன் ‘த மெர்ச்சென்ட் ராயல்’ என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
1799 : இலங்கையில் அரசு ஆணைப்படி சித்திரவதை மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன.
மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
1803 : இரண்டாவது மராட்டியப் போர் :- பிரிட்டிஷ் படைக்கும் மராட்டியப் படைகளுக்கும் இடையே அஸாய் எனும் இடத்தில் கடும் போர் நிகழ்ந்தது.
1809 : பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் பிராமா என்பவர் மை ஊற்றும் பேனா தயாரிப்பதற்கான காப்புரிமம் பெற்றார்.
1821 : திரிப்பொலீத்சா நகரை கிரேக்கர்கள் தாக்கி 30 ஆயிரம் துருக்கியரைக் கொன்றனர்.
1846 : சூரியனிலிருந்து எட்டாவது கோளான நெப்டியூன் கண்டுபிடிக்கப் பட்டது.
1848 : அமெரிக்காவில் ஜான் கார்ட்டிஸ் என்பவரால் வர்த்தகரீதியாக முதன்முதலாக சூயிங்கம் தயாரிக்கப்பட்டது.
1868 : ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக புவெர்ட்டோ ரிக்கோவில் கிளர்ச்சி நடைபெற்றது.
1889 : ஜப்பான், நின்டெண்டோ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1905 : நார்வேயும் ஸ்வீடனும் அமைதியாகப் பிரிவதற்கு உடன்பட்டன.
1908 : கனடாவில் ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.
1913 : பிரான்ஸின் ரோலண்ட் கரோஸ் என்பவர் மத்தியதரைக் கடலை முதன்முதலாக விமானத்தில் கடந்து சாதனை படைத்தார்.
1919 : லண்டன் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன் சர்வீஸ் துவக்கப்பட்டது.
1941 : நாஜிகளின் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு கொலைகள் முதல்தடவையாக பரிசோதிக்கப்பட்டது.
1950 : கொரியப் போர் :- அமெரிக்கப் படைகள் தவறுதலாக பிரிட்டன் படைகள் மீது நேபாம் குண்டுகளை வீசின.
17 பேர் கொல்லப்பட்டு 79 பேர் காயமடைந்தனர்.
1965 : ஏடனில் பிரிட்டிஷ் நேரடி ஆட்சியை அமலுக்குக் கொண்டு வந்தது.
1966 : நாசாவின் சர்வேயர் 2 விண்கலம் சந்திரனின் கோபர்நிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
1980 : புளோரிடாவில் பிக் தண்டர் மலை ரயில்பாதை திறக்கப்பட்டது.
1983 : கல்ஃப் ஏர் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 117 பேரும் உயிரிழந்தனர்.
1986 : இலங்கை, கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
1993 : இலங்கை, மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த 41 தமிழ் அரசியல் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
2004 : ஹெயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் உயிரிழந்தனர்.
2008 : பின்லாந்து, பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.

