*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

திமுக எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி, 50 கோடி பணம் தருவதாக தவெக பேரம். நாகர்கோவில், வேப்பனஹள்ளி எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசப்பட்டது பற்றி பரபரப்பு தகவல்.

தவெக-வின் குதிரை பேரம், அதிகார அத்துமீறல் குறித்து ஆளுநரிடம் திமுக, அதிமுக, புகார். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக தகவல்.

மக்கள் பிரச்சினையை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்க கூறிய அர்லேகருக்கு அமைச்சர்கள் கண்டனம். அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு எதிர்ப்பு.

குதிரை பேரத்தை கைவிட்டு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தவெக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

வீடுபுகுந்து தாக்கிய வழக்கில் வரும் 10-ம் தேதி அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக நீதிமன்றம் ஆணை. வழக்கை வாபஸ் பெற அழுத்தம் கொடுப்பதாக சகோதரர் குடும்பத்தினர் புகார்.

பரபரப்பான அரசியல் சூழலில் வரும் 20-ம் தேதி கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர். முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய பாஜக அரசு திட்டம்…

மும்பையில் கொட்டும் பலத்த மழையால் 4-வது நாளாக முடங்கிய இயல்பு வாழ்க்கை. மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை. சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களில் 50 சென்டி மீட்டர் வரை அதி கனமழை பதிவாக வாய்ப்பு.

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து, பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களிலும் காணிக்கை திருட்டு. பிரதமர் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி.

ஈரானில் லட்சக்கணக்கானோர் திரண்டு கமேனி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி. வரும் 9-ம் தேதி வரை 6 நாட்கள் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிப்பு.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பராகுவே அணியை வீழ்த்தியது பிரான்ஸ். மற்றொரு நாக்அவுட் போட்டியில் கனடாவை துவம்சம் செய்தது மொராக்கோ அணி.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி. முதல் வெற்றியை பெறமுடியாமல் தவிக்கும் கேப்டன் ஷ்ரேயஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =

You missed