கடவுள் பெயரை சொல்லி பல நூறு கோடிகள்..

அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த நன்கொடைகளை முறைகேடு செய்ததாக எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பக்தர்களின் நம்பிக்கையை நாசம் செய்திருக்கும் இந்த எட்டு பேருக்கும்   ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக கூடாது என்று ஃபைசாபாத் பார் அசோசியேஷன் எச்சரித்துள்ளது.

அப்படி மீறுபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதைவிட இன்னும் ஒரு படி மேலே போய், ராமர் கோயில் அறக்கட்டளையில் உள்ள நிர்வாகிகள் இன்னும் மூன்று நாட்களுக்குள் அயோத்தியை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.

இன்னொரு பக்கம், இந்த மோசடி விவகாரம் நாட்டையே உலுக்குகிறது என்பதால் வழக்கை சிபிஐக்கு மாற்றி அவசரமாக உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் டெல்லி வழக்கறிஞர்கள் இருவர் சார்பில்  மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை நேற்று  விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாஹு ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரத்தை அவசரமாக விசாரிக்காவிட்டால் அப்படியே வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடாது என்றும் நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லி இருக்கிறது.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை சர்வ சாதாரணமாக சிதைத்து இருக்கிறது ஒரு கும்பல்.

சாதாரணமாக ஏமாற்றுபவனை விட கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் தான் எக்கச்சக்கமாக அடிக்கிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 7 =

You missed