சேலம் மாநகராட்சி பகுதியில் திருமணிமுத்தாறு செல் லும் இடங்களில் மாவட்ட ஆட்சி யர் க.இளம்பகவத் சனிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு பின்னர் ஆட்சி யர் தெரிவித்துள்ளதாவது:
சேலம்மாவட்டத்தில் அருநூற்று மலை மற்றும் சேர்வராயன் மலைப் பகுதியில் திருமணிமுத்தாறு உற்பத் தியாகி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், சேலம் மாநகராட்சி, வீர பாண்டி ஒன்றியம் வழியாக நாமக் கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர், மல்லசமுத்திரம் மற்றம் எலச்சிப் பாளையம் வழியாக சென்று பர மத்தி வேலூர் வட்டத்தில் நன்செய் இடையார் எனுமிடத்தில் காவிரி யில் கலக்கிறது. அந்தவகையில்,சேலம்மாநகராட் சிக்கு உள்பட்ட பகுதிகளில் திரும ணிமுத்தாறு செல்லும் பாதைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, திருமணிமுத்தாறு செல்லும் பாதையான மன்னார்பா ளையம், செங்கல் அணை, கோகுல் நகர் பகுதியிலும், அணைமேடு, வெள்ளக்குட்டை பகுதிகளில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு, அவற்றின் செயல் பாடு குறித்து ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
சேலம் மாநகரப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாநகராட்சி அலு வலர்களிடம் கேட்டறியப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோன்று, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் திருமணிமுத்தாறின் பல்வேறு பகு திகளில் நீரின் தரத்தை பகுப்பாய் வுக்கு உட்படுத்தி, அதன் தரம் மற் றும் மாசுபாட்டின் அளவைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள தொடர்புடைய அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் லலித் ஆதித்ய நீலம், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜி.பி.நந் தன, மாநகர நல அலுவலர் எஸ். ராம்குமார், தமிழ்நாடு மாசுக்கட் டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் புருஷோத்த மன், நீர்வளத் துறை செயற்பொறி யாளர் அப்புசாமி ஆகியோர் உட னிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

You missed