*இன்றைய தலைப்புச் செய்திகள்*
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடக்கம். நேரமில்லா நேரமும் இருப்பதால் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்ப்பு
யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம். அமெரிக்காவின் அழுத்தமே காரணம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என அறிவிக்கவும் பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக முதல்வர் விஜய் வலியுறுத்தல்.
5 ஆண்டுகளில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய இலக்கு. 600 கோடியில் தமிழ்நாடு மண் வள பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.
திமுக அரசு கொண்டு வந்த உழவன் செயலி, மாடித்தோட்ட தொகுப்பு திட்டங்களின் பெயர் மாற்றம். தென்னை மேம்பாட்டு திட்டத்தின் பெயரும் தென்னை சிறப்பு திட்டம் என மாற்றி வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.
பயிர்க்கடன் தள்ளுபடி, நெல்லுக்கான ஆதார விலை உயர்வு குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. தவெக அரசின் வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் வேதனை.
குறுவை சாகுபடி பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெற்று பட்ஜெட்டாக வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களில் வெற்றி என்ற லேபிளை ஒட்டினால் போதும் என அரசு நினைக்கிறதா என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி
பட்ஜெட்டில், அரசு ஊழியர் ஓய்வூதிய நிதி 14 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டதற்கு தலைமைச் செயலகச் சங்கம் கண்டனம். சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் விளக்கமளிக்க வலியுறுத்தல்.
பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி.விசாரணையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் நீட் எதிர்ப்பு கூட்டியக்கத்தினர் 7-வது நாளாக பட்டினிப் போராட்டம். நான்கு பேரில், உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.
சென்னை மேடவாக்கத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு. குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்ய வலியுறுத்தி இரவில் பொதுமக்கள் மறியல் போராட்டம்.
பாட்டிலுக்கு 10 ரூபாய் என்பது 2011-ம் ஆண்டில் இருந்தே நடைமுறையில் உள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம்.
தவெக அரசை விமர்சித்ததால் பொய் வழக்கில் பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டிருப்பதாக சீமான் கண்டனம். அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தும் விஜய்யின் போக்கு அதிகார முறைகேடு என்றும் காட்டம்.
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவகாரத்து வழக்கு. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணை.
புதுச்சேரியில் மழை காரணமாக சுவர் இடிந்த விபத்தில் முதியவர் உயிரிழப்பு. மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதி.
கரூர் அருகே 60 ஆண்டுகளாக வாழ்ந்த வீடுகள் இடிப்பு. மாற்று இடமின்றி குழந்தைகளுடன் நிர்கதியாக நிற்பதாக பெண்கள் கண்ணீர்.
சிதம்பரம் அருகே புவனகிரியில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறிய வெறிநாய். அச்சத்துடன் வெளியே செல்லும் நிலை இருப்பதாக மக்கள் வேதனை.
கர்நாடகாவில் பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை முயற்சி. கடை உரிமையாளரின் துணிச்சலால் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பியோட்டம்.
பீகார் அரசு மருத்துவமனையில் கால் எலும்புமுறிவுக்கு அட்டை பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர். சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் சர்ச்சை.
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டம். ஆதரவு கோரி காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்கு நடப்பாண்டில் இதுவரை 75 கோடி ரூபாய் செலவானதாக தகவல்.2001 முதல் மொத்தம் 557 கோடி செலவாகியுள்ளது என்றும் வெளியுறவுத்துறை பதில்.
உத்தரப்பிரதேசத்தில் திறப்புவிழா கண்ட ஒரே மாதத்தில் விரிசல் விழுந்த நெடுஞ்சாலை.மழை ஈரத்தை காய வைக்க அதிகாரிகள் மின் விசிறிகளை பயன்படுத்தியதால் சர்ச்சை.
ஈரான் போரால் அமெரிக்காவில் ஆயுத தட்டுப்பாடு எனத் தகவல். வதந்தி பரப்பியவர்கள் தேசத் துரோகிகள் என ட்ரம்ப் குற்றச்சாட்டு.
அமெரிக்காவில் ஷாப்பிங் செய்ய ஹெலிகாப்டரில் சென்ற 69 வயது முதியவர்.கடை பார்க்கிங்கில் திடீரென ஹெலிகாப்டர் இறங்கியதால் பரபரப்பு.
பறக்கும் விமானத்தின் இறக்கையில் நின்று 97 வயது மூதாட்டி சாகசம். அதிக வயதில் நிகழ்த்தி காட்டியவர் என்ற புதிய உலக சாதனையை படைத்தார்.
கோலிவுட்டில் இன்று 3 திரைப்படங்கள் ரிலீஸ்.டிசி (DC), ஜிடிஎன் (GDN) படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு.
ஸ்பைடன் மேன் திரைப்படம் 8 நாட்களில் 12 ஆயிரத்து 462 கோடி ரூபாய் வசூலித்து சாதனை. இந்தியாவில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் வசூல்
அரசியல்
அரசு அறிவிப்புகள்
அரசு ஊழியர்கள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
கல்வி
காவல் துறை
தமிழக அரசு
தமிழக வெற்றி கழகம்
தமிழகம்
தவெக
துக்கம்
துயரம்
நிகழ்வுகள்
நெடுஞ்சாலை துறை
நேற்று
பள்ளிக்கல்வித்துறை
பொதுமக்கள் பிரச்சினை
மழை
முகப்பு பக்கம்
மேட்டூர் அணை
வனத்துறை
விபத்து
விளையாட்டு
விவசாயம்
