
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி மதுக் கடைகள், பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் மூடப்பட்டன.
இன்று (ஏப்.21) முதல் 3 நாட்கள் வரை மூடப்பட்டதால், நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.
தினமும் ரூ.140 கோடி முதல் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.350 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
