
*கோவையில் கோர விபத்து. கல்லூரி மாணவி பரிதாப பலி!*
கோவை மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அபிராமி செவிலியர் கல்லூரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில், இரண்டாம் ஆண்டு செவிலியர் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
மேலும், இரண்டு மாணவிகள் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனுஸ்ரீ (21). இவர் அபிராமி செவிலியர்
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
காயமடைந்த தேவிகா (21) வலது
தொடையில் எலும்பு முறிவு
ஏற்பட்டும், ஸ்ரீதரணி (21) கையில் லேசான சிராய்ப்பு காயம் மற்றும்
அதிர்ச்சியுடனும் சுந்தராபுரத்தில் உள்ள அபிராமி
மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட
விசாரணையில், மதிய
உணவுக்குப் பிறகு விடுதியில்
இருந்து கல்லூரிக்குத் திரும்பிய மூவரும் கல்லூரி முன்பாக உள்ள எல்&டி பைபாஸ் சாலையை கடக்க முயன்றபோது, கொச்சி திசையில் இருந்து சேலம் நோக்கி தவறான சாலையில் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் அனுஸ்ரீ சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்துக்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற லாரி ஓட்டுநரான கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பால்ராஜ் (40) கீழே விழுந்ததில் அவரது வலது கண்ணில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து டிப்பர் லாரியையும்,
அதன் ஓட்டுநரையும் மதுக்கரை போலீசார் பிடித்து காவலில்
எடுத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
