நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்…

50க்கும் மேற்பட்ட போலீசார் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


நீட் தேர்வு முறைகேடு, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது தாக்குதல்,மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர்கேட் பகுதியில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமானது வளாகத்தின் நுழைவாயிலில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும், இவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுமார் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =

You missed