*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இன்று நாடு தழுவிய
போராட்டத்திற்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு. பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் திட்டவட்டம்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு. வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி அறிவிப்பு.

26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கல்வியாளர் வாங்சுக். ஒன்றிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசியதை அடுத்து முடிவு.

டெல்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி பேரணி. இளைஞர்களுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்கும் என காந்தி நினைவிடத்தில் உறுதியேற்பு

நாடு முழுவதும் தீவிரமடையும் நீட் எதிர்ப்பு போராட்டம். ஒன்றிய அமைச்சர் பிரதான் பதவி விலகக்கோரி முழக்கம்.

டெல்லி இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர் சங்கம் போராட்டம். நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கம்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர்தர மறுக்கும் கர்நாடகாவை எதிர்த்துப் பேச தவெக அரசுக்கு என்ன பயம் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி. விஜய் மௌனத்தைக் கலைத்து, மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

ஏ சான்று பெற்ற ஜனநாயகன் படத்தை அமைச்சர் ராஜீவ், குழந்தைகளுடன் சென்று பார்த்ததால் சர்ச்சை. ரத்தம் தெறிக்கும் படத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றதால் வலுக்கும் கண்டனம்.

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டியை எலிகள் கடித்து குதறிய சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம். மக்கள் எக்கேடாய் போனால் என்ன என்று, Blastu Blastu என புதிய நீரோ அரசு உள்ளதாகவும் காட்டம்.

காவிரி நீர் குறித்து கர்நாடகாவிடம் பேச முதல்வர் விஜய்க்கு திராணி இல்லை என நயினார் நாகேந்திரன் காட்டம். ஜனநாயகமே இல்லாமல் படத்தை பார்த்து அமைச்சர்கள் அழுகிறார்கள் என்றும் விமர்சனம்.

தூத்துக்குடியில் போலீஸ் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்ததாக சகோதரர் குற்றச்சாட்டு. தங்களுக்கு உரிய நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் போராட்டம். கவர்ச்சியின் மூலம் விஜய், இளைஞர்களை இழுத்துச் சென்றதாக இயக்குநர் அமீர் விமர்சனம்.

நீட் மூலம் மருத்துவக் கல்வியை நம்மிடம் இருந்து பறிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக வெற்றிமாறன் குற்றச்சாட்டு. நீட் தேர்வை எதிர்க்கும் தமிழ்நாடு அரசு, மாணவர்களை ஒடுக்குவது ஏன் என்று பா.ரஞ்சித் கேள்வி.

உதகையில் குடிநீர் திருட்டில் ஈடுபடும் காட்டேஜ்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி எச்சரிக்கை.

கும்பகோணம் அருகே மா மரங்களை வெட்டி சாய்க்கும் விவசாயிகள். மாங்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என வேதனை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. பாரத் பெட்ரோலியம் எரிபொருள் விலையை உயர்த்தக்கூடும் என தகவல்.

மழை வெள்ள பாதிப்பால் அசாம் மாநிலத்தில் 50 பேர் உயிரிழப்பு. வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் சுமார் 8 லட்சம் பேர் பாதிப்பு.

இஸ்ரேலை அங்கீகரித்து “ஆபிரகாம் உடன்படிக்கையில்” இணைய வேண்டும். மறுத்தால், அணுசக்தி ஒப்பந்தம் ரத்து என சவுதிக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.

பிரான்சில் வேகமாக பரவும் காட்டுத் தீயை அணைக்க போராட்டம். முன்னெச்சரிக்கையாக 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு  வெளியேற்றம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் கட்டும் சொகுசு விடுதிக்கு எதிராக அல்பேனியாவில் வலுக்கும் போராட்டம். ஒரு மாதகாலமாக நடைபெற்று வரும் போராட்டத்தில், போராட்டக்காரர்கள் – போலீசார் இடையே பயங்கர மோதல்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி. 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =

You missed