*வரலாற்றில் இன்று*
*02 ஜூலை 2026-ஞாயிறு*
*========================*

1790 : அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.

1798 : பிரெஞ்சுப் புரட்சிப் போர் :- நைல் நதிப் போரில் பிரிட்டிஷ் வெற்றி பெற்றது.

1830 : பிரான்ஸ் மன்னர் பத்தாம் சார்லஸ் முடிதுறந்தார்.

1858 : இந்தியாவின் நிர்வாகத்தை கிழக்கிந்தியக்  கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது.

1870 : உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.

1914 : முதலாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படை லக்சம்பர்க்கை முற்றுகையிட்டன.

1916 : முதலாம் உலகப்போர் :- லியானார்டோ டாவின்சி என்ற இத்தாலி போர்க்கப்பல், ஆஸ்திரியாவினால் மூழ்கடிக்கப்பட்டது.

1918 : கனடா வரலாற்றில் முதல்முறையாக பொது வேலை நிறுத்தம் வான்கூவர் நகரில் நடைபெற்றது.

1922 : சீனாவைத் தாக்கிய சூறாவளியில் ஐம்பதாயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

1934 : ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்.

1937 : அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும், அதன் துணை விளைபொருட்களும் தடை செய்யப்பட்டன.

1943 : இரண்டாம் உலகப் போர் :- அமெரிக்கப் படகு ஒன்று ஜப்பான் கடற்படையினரின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது.

போலந்தில் ட்ரெப்ளிங்கா வதைமுகாமில் நாஜிக்களுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி நடைபெற்றது.
இம்முகாமில் 18 மாதங்களில் 9 லட்சம் கைதிகள் கொல்லப்பட்டனர்.

1947 : புவெனஸ் ஐரிஸில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதன் சிதைவுகள் 1998 ல் கண்டுபிடிக்கப்பட்டன.

1968 : பிலிப்பைன்ஸில் கசிகுரான் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.

1973 : பிரிட்டன், மாண் தீவில் கேளிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.

1980 : இத்தாலியில் பொலோனா ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் உயிரிழந்தனர்.
200 பேர் காயமடைந்தனர்.

1985 : டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டெக்சாஸ் மாநில பன்னாட்டு விமான நிலையத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.

1988 : இந்திரா காந்தியை கொன்ற வழக்கில் கொலையாளிகளான சத்வத்சிங், கேஹர்சிங் இருவருக்கும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

1989 : யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பேர் கொல்லப்பட்டனர் .

1990 : ஈராக், குவைத்தின் மீது படை எடுத்தது.
வளைகுடாப் போர் ஆரம்பமானது.

1999 : அசாம் மாநிலத்தில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.

2006 : திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர், ராணுவ முகாம்களை தாக்கி மூதூர் ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் விடுதலைப்புலிகள் நுழைந்தனர்.

2014 : சீனாவில் குன்சான் நகரில் தொழிற்சாலையில்  ஏற்பட்ட விபத்தில் 146 பேர் உயிரிழந்தனர்.
114 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + thirteen =

You missed