
மேட்டுப்பாளையத்தில் ஜேசிபி ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்ததாக மனைவி காவல் நிலையத்தில் புகார்
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் பகுதியில் ஜேசிபி ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து விட்டதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் ஜே சி பி இயந்திரம் வைத்துள்ளார். இவருக்கு சுசிலா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனை அடுத்து இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கடந்த சில வருடங்களாக,ஜேசிபி இயந்திரத்தை ஓட்டி வந்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு சரவணகுமார் ஒப்பந்தம் எடுத்திருந்த நிலையில் மணிகண்டன் தனது ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அப்பணியை செய்து வந்தார். கடந்த ஒரு மாதமாக சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சரவணகுமார் மணிகண்டனுக்கு பாக்கி பணமாக்க 3 லட்சம் தரவேண்டிய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு லட்சம் தர வேண்டும் எனவும் கூறப்படுகிறது. கடந்த 27 ஆம் தேதி சரவணகுமார் மேட்டுப்பாளையம் வந்துவிட்டு 28ஆம் தேதி ஊருக்கு சென்றுள்ளார். தொடர்ந்து மணிகண்டனுக்கு தரவேண்டிய பாக்கி பணத்தை தராமல் சென்றுள்ளார். மணிகண்டன் போனில் தன் மனைவி சுசீலாவை தொடர்பு கொண்டு சரவணகுமார் பாக்கி பணத்தை பெறாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜேசிபி வாகன சாவி எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து மணிகண்டன் சரவணகுமாரை செல்போனில்தொடர்பு கொண்டு பாக்கி பணம் குறித்து கேட்ட பொழுது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனது ஜேசிபி இயந்திரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் அறிந்த காவல்துறையினர் மணிகண்டனை மீட்டு கோவை அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்துடுத்து மணிகண்டனின் மனைவி சுசீலா தனது கணவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரது இறப்பின் மர்மம் உள்ளதாகவும் இதற்கு காரணமாக இருந்து காண்ட்ராக்ட்டர் சரவணகுமார்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
