
*16 வயதிலேயே அணைந்த ரேக்ளா ரேஸ் நட்சத்திரம்*
சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த ரேக்ளா ரேஸ் வீரர் சிறுவன் கணேசன் (16) சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தென் மாவட்டங்களில் நடைபெற்ற பாரம்பரிய குதிரை வண்டிப் பந்தயங்களில் பங்கேற்று கவனம் பெற்றவர்.
இளம் வயதிலேயே அதிவேக ஓட்டத்தால் அனுபவமிக்க ஜாக்கிகளுக்கு மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தார்.
அவரது ரேக்ளா ரேஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஈர்த்திருந்தன.
கணேசனின் திடீர் மறைவு ரேக்ளா ரேஸ் உலகிலும், சமூக வலைதளங்களிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
