அடச்சீ. நிலம் கைமாறிய அடுத்த கணமே மைத்துனருடன் ஓட்டம். இடைத்தரகரை நம்பி மனைவியின் பெயரில். நிலத்தை எழுதி வைத்து. நடுத்தெருவில் நின்ற கணவன். பீகாரில் பரபரப்பு.!”

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள கர்ஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் விஷால் குமார். இவரது தாயாரின் பெயரில் 9 கட்டா நிலம் இருந்தது

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தாய், தான் இறப்பதற்குள் அந்த நிலத்தை தனது ஒரே மகனான விஷாலின் பெயருக்கு மாற்ற தஹ்சீல் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அங்கு இருந்த ஒரு இடைத்தரகர், நிலத்தை மகனின் பெயருக்கு மாற்றுவதை விட மருமகள் அல்லது மகளின் பெயருக்கு மாற்றினால் குறைந்த செலவிலேயே பதிவை முடித்துவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்
விஷாலுக்கு சகோதரிகள் யாரும் இல்லாத காரணத்தால், அந்த இடைத்தரகரின் பேச்சை நம்பி தாய் நிலத்தை தனது மருமகளின் பெயருக்கே பதிவு செய்து கொடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக, நிலம் மருமகளின் பெயருக்கு மாற்றப்பட்ட மறுநாளே, அவர் விஷாலின் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிப்போனார்.

தான் ஏமாற்றப்பட்டதையும், நிலத்தையும் மனைவியையும் ஒரே நேரத்தில் இழந்ததையும் அறிந்த விஷால் குமார் பெரும் அதிர்ச்சியடைந்தார். தற்போது தனக்கு நேர்ந்த இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது நிலத்தை மீண்டும் மீட்கக் கோரியும் அவர் அரசு அதிகாரிகளின் அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக அலைந்து திரிந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

You missed