குரோம்பேட்டையில் விலாசம் கேட்பது போல் பேசி62, வயதான மூதாட்டியின்  கழுத்தில் இருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பட்டதாரி இளைஞரை குரோம்பேட்டை போலீசார் கைது செய்தனர்

சென்னை குரோம்பேட் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தியம்மா (வயது-62) இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய பாப்பாத்தியம்மா, அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.அப்போது முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விலாசம் கேட்பது போல் பேசினார். சிறிது நேரத்தில் பாப்பாத்தியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பாத்தியம்மா குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் குரோம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி விடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில், செயின் பறித்தவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் மேட்டுத்தெருவை சேர்ந்த சந்தோஷ், (வயது-22) என அடையாளம் காணப்பட்டார்.

விசாரணையில் சந்தோஷ் பட்டதாரி என்றும், கையில் பணம் இல்லாததாலும், கஞ்சா போதையிலும் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தற்போது அவர் சானடோரியம், துர்கா நகர் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார் சந்தோஷை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்* ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சந்தோஷை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =

You missed