
வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் வானில் தென்படும் அரிய ‘கோள்களின் அணிவகுப்பு’ நிகழ்வு இன்று இரவு நடைபெற உள்ளது.
இந்த அணிவகுப்பில் புதன், வியாழன், செவ்வாய், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 6 கோள்கள் இடம்பெறுகின்றன.
இதில் புதன், வியாழன், செவ்வாய், சனி ஆகியவற்றை வெறும் கண்களால் காண முடியும்.
யுரேனஸ் மற்றும் நெப்டியூனை தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும்.
புதன் மற்றும் வியாழன் அதிக பிரகாசத்துடனும், செவ்வாய் சிவப்பு நிறத்திலும், சனி மஞ்சள் நிறத்திலும் தென்படும். மேலும், அமாவாசை இரவு வானம் இருட்டாக இருப்பது கோள்களைக் கண்டறிய சாதகமாக இருக்கும்.
தெளிவான வானம் மற்றும் சாதகமான வானிலை நிலவும் பட்சத்தில், அடிவானத்திலிருந்து குறைந்தது 10 டிகிரி உயரத்தில் இந்த அரிய காட்சியைக் காணலாம்.
