
*வரலாற்றில் இன்று*
*28 ஜூன் 2026-ஞாயிறு*
*========================*
1098 : முதலாம் சிலுவைப்போர் வீரர்கள் மொசூல் படைகளைத் தோற்கடித்தனர்.
1360 : ஆறாம் முகம்மது கிரனாடாவின் பத்தாவது
நஸ்ரித் வம்ச மன்னராக முடிசூடினார்.
1461 : நான்காம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1635 : குவாடலூப் பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது.
1079 : ரஷ்யாவின் முதலாம் பீட்டர் ஸ்வீடனின் பன்னிரண்டாம் சார்லஸ் மன்னரை போல்டாவா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தோற்கடித்தார்.
1838 : விக்டோரியா பிரிட்டனின் அரசியாக முடி சூடினார்.
1846 : அடோல்ஃப் சாக்ஸ் சாக்ஸபோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
1859 : இங்கிலாந்தின் அபன்டைனில் உலகின் முதல் நாய் கண்காட்சி நடைபெற்றது.
1881 : ஆஸ்திரிய – செர்பியக் கூட்டணி, ரகசியமாக
கையெழுத்திடப்பட்டது.
1894 : அமெரிக்காவில் தொழிலாளர் தினம் அதிகாரபூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
1896 : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 58 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1904 : நோர்ஜ் என்ற டென்மார்க் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய திட்டுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் உயிரிழந்தனர்.
1911 : நக்லா என்ற விண்கல் எகிப்தில் விழுந்தது.
1914 : ஆஸ்திரியா இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பொஸ்னிய – செர்பிய தேசியவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
முதலாம் உலகப் போர் தொடங்க இதுவே காரணமானது.
1917 : முதலாம் உலகப் போர் :- கிரேக்கம் கூட்டு அணிகளுடன் இணைந்தது.
1919 : வெர்சாய்ஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜெர்மனிக்கும் முதலாம் உலகப்போரின் நேச அணிகளுக்கும் இடையே போர் முடிவுக்கு வந்தது.
1922 : ஐரிஸ் உள்நாட்டுப் போர் டப்ளினில் ஆரம்பமானது.
1926 : காட்லீப் டைம்லர், கார்ல்பென்ஸ் ஆகியோரின் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு மெர்சிடிஸ் – பென்ஸ் நிறுவனம் உருவானது.
1940 : ருமேனியாவிடமிருந்து மால்டோவாவை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
1942 : இரண்டாம் உலகப் போர் :- நாஜி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் மீது நீலத் திட்டம் என்ற பெயரில் தாக்குதலை ஆரம்பித்தது.
1950 : கொரியப் போர் :- சியோல் வடகொரியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
கொரியப் போர் :- ஒரு லட்சத்திற்கும் அதிகமான கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
கொரியப் போர் :- கொரிய மக்கள் ராணுவம் சியோல் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில்
900 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1964 : மல்கம் எக்ஸ் ஆப்ரிக்க- அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார்.
1973 : வடக்கு அயர்லாந்தில் முதல்முறையாக பொதுத் தேர்தல்கள் நடைபெற்றன.
1981 : டெஹ்ரானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இஸ்லாமியக் குடியரசு கட்சியின் 73 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
1984 : 104 ஆண்டுகளாக வெளிவந்த டிட்பிட்ஸ் எனும் பிரிட்டிஷ் பத்திரிகை நின்றுவிட்டது.
1987 : ராணுவ வரலாற்றில் முதல் தடவையாக பொதுமக்கள் மீது வேதிப்பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈராக் போர் விமானங்கள் ஈரானின் சர்தாஷ்ட் நகர் மீது தாக்குதல் நடத்தியது.
1995 : மண்டைத் தீவு ராணுவ படைத்தளத்தை விடுதலைப்புலிகள் தாக்கிக் அழித்தனர்.
2009 : ஹொண்டுராஸ் ஜனாதிபதி மானுவெல் ஸெலாயா ராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2016 : துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
230 பேர் காயமடைந்தனர்.
