*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று காலை பாக்யராஜ் உடல் தகனம். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் தலைவர்கள், தென்னிந்திய திரையுலகினர் திரண்டு வந்து பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி. முற்போக்கு சிந்தனை கருத்துகளை படத்தில் காட்டியவர் என பலரும் புகழாரம்.

இஸ்லாமியராக மதம் மாறுவோருக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்றம். மேல்முறையீடு செய்யப்படும் என அமைச்சர் ஷாஜகான் பேட்டி

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆந்திராவைச் சேர்ந்தவர் என அமைச்சர் நிர்மல்குமார் தகவல். டெல்லியில் இருந்து ஒருங்கிணைப்புப் பணிகளை மட்டுமே வெங்கட நாராயணா மேற்கொள்வார் என விளக்கம்

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மதிமுக. இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப்படும் என வைகோ அறிவிப்பு.

மதிமுக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்யக்கோரி விஜய் கேட்டதாக வைகோ பரபரப்பு தகவல். இடைத்தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டியது தமது பொறுப்பு என உத்தரவாதம் அளித்ததாகவும் பேட்டி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம். செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, புதிய தலைவரை நியமித்தது காங்கிரஸ் தலைமை.

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி முழக்கங்களுடன் சாமி தரிசனம்..

8 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர் சார்லஸ் கடத்தல். பணத்தை இழந்தோர் கடத்தினரா அல்லது சொத்து ஏலத்தை நிறுத்த முயற்சியா என பல கோணங்களில் விசாரணை.

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே நடந்த பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை. தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

திருவாரூரில் அமைச்சர் பர்வேஸ் உடன் சென்ற கார் மோதி பெண் காவல் ஆய்வாளர் படுகாயம். த.வெ.க. நிர்வாகியின் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை.

திருச்சி பழைய காவேரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள். வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

விபி-ஜி ராம் ஜி திட்டத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களே கடும் எதிர்ப்பு. 40 சதவீத நிதியை மாநிலங்களே ஏற்க வேண்டியுள்ளதால், கடும் நிதிச்சுமை ஏற்படுவதாக அதிருப்தி.

ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர், அறங்காவலர் ஆகியோர் பதவி விலகல். ராமர் கோயில் நன்கொடை ஊழல் குறித்து பிரதமர் மவுனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கேள்வி.

ஒன்றிய வேளாண் இணை அமைச்சர் பகீரத் சௌத்ரி வெள்ளரித்தோட்டம் அமைக்க 2 வாரத்தில் அனுமதி. தனக்குத்தானே ஒரு கோடி ரூபாய் மானியம் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

மராட்டியத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால் பரபரப்பு. நாளை நடைபெற இருந்த தேர்வை ஒத்திவைப்பு.

அயர்லாந்துக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இன்று களமிறங்கும் இந்தியா. தொடரை இந்திய அணி சமன் செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

5 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையே கொண்ட கேப் வெர்டே, நாக்அவுட் சுற்றுக்கு தகுதி. கால்பந்து உலகக்கோப்பையில் மிகவும் சிறிய நாடாக சாதனை படைத்து அசத்தல்.

ஹோர்முஸ் விவகாரத்தால் அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் மோதல். ஏவுகணை தாக்குதல்களால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =

You missed