மங்களபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு செல்ல கோரிக்கை
இராசிபுரம்;ஜீலை-28;

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மங்களபுரம் கிராமம் உள்ளது.இந்நிலையில்மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் மேலாடை இல்லாமல் அறைநிர்வாணமாக சுற்றி திரிகிறார்.
இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அச்சம் அடைகின்றனர்.பொதுமக்களும் சாலையில் செல்லும் போது ஒரு வித பயத்தில் காணப்படுகின்றனர்.
எனவே பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் அரசு தலையிட்டு அந்த நபரை மீட்டு காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =

You missed