
வரலாற்றில் இன்று
29 ஜூன் 2026-திங்கள்
========================
1194 : நார்வேயின் மன்னராக ஸ்வெர் முடிசூடினார்.
1534 : ஜாக் கார்டியர் முதலாவது ஐரோப்பியராக பிரின்ஸ் எட்வர்ட் தீவை அடைந்தார்.
1613 : லண்டனில் ஷேக்ஸ்பியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது.
1850 : வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.
1864 : கனடாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 99 பேர் உயிரிழந்தனர்.
1880 : பிரான்ஸ் டஹிடியைக் கைப்பற்றியது.
1888 : ஜார்ஜ் எட்வர்ட் கோராட் என்பவர் ஆண்டெலின் எகிப்தில் இஸ்ரேல் என்ற ஆக்கத்தை கிராமபோன் உருளை ஒன்றில் பதிவு செய்தார்.
1895 : ரஷ்ய அரசின் படைக்கு கட்டாய ஆள் எடுக்கும் நடவடிக்கையை கண்டித்து டுகோபார் குழுவினர் தமது ஆயுதங்களை எரித்தனர்.
1904 : மாஸ்கோவில் ஏற்பட்ட சூறாவளியினால் சுமார் 1,500 வீடுகள், கட்டிடங்கள் அழிந்தன.
1925 : கலிபோர்னியாவில் 6.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றிலும் அழிந்தது.
1950 : கொரியப் போர் :- அமெரிக்க ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமன் கொரியா மீது கடல் மார்க்கத் தடை ஏற்படுத்துவதற்கு அனுமதி அளித்தார்.
1975 : ஸ்டீவ் வாஸ்னியாக் முதலாவது ஆப்பிள் 1 கணினியை சோதித்தார்.
1976 : சீஷெல்ஸ் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.
மிதக்கும் அஞ்சல் நிலையம் கேரளாவின் குட்டநாடில் துவக்கப்பட்டது.
1995 : அட்லாண்டிக் விண்ணோடம் ரஷ்ய விண்வெளி நிலையம்
மீர் உடன் முதல் தடவையாக இணைந்தது.
தென்கொரியாவின் சியோல் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று இடிந்து விழுந்ததில் 501 பேர் உயிரிழந்தனர்.
937 பேர் காயமடைந்தனர்.
2002 : தென் கொரியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நடைபெற்ற கடற்படை போரில் 6 தென்கொரிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வடகொரியப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது.
2007 : ஆப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐபோன் செல்லிடப்பேசியை அறிமுகப்படுத்தியது.
2012 : அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கிய சூறாவளியினால் 22 பேர் உயிரிழந்தனர்.
2014 : நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள நான்கு கிறிஸ்தவக் கோயில்களை இஸ்லாமியத் தீவிரவாதிகள் தீக்கிரையாக்கி, அங்கிருந்த குறைந்தது 30 பேரைக் கொன்றனர்.
2015 : சென்னை மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர் – சென்னை கோயம்பேடு இடையே ஆரம்பிக்கப்பட்டது.
