நாமக்கல்.ஏப்,6-
நாமக்கல் மாவட்டம் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை உள்ளது. இங்குபேருந்து நிறுத்தம் உள்ளது. நாள்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிமாணவ மாணவிகள் மற்றும் பேருந்து பயணிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் இங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இடங்களில் இருந்து வெளிவரும் கழிவு நீர் பேருந்து நிறுத்தத்தில் குட்டை போல் தேங்குகிறது.இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.எனவே அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

