
வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் வழியாக பெங்களூரில் இருந்து தென்காசிக்கு காரில் குட்கா கடத்துவதாக எஸ்பி.பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் படி எஸ்பி தனி படையினர் சார்பு ஆய்வாளர் சேக் தாவூத் மற்றும் காவலர்கள் வேடசந்தூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வேகமாக வந்த இனோவா கார் நிறுத்தாமல் சென்றது சந்தேகம் அடைந்த தனிப்படையினர் காரை துரத்தி கருக்காம்பட்டி அருகே பிடித்து சோதனை செய்தனர் அப்போது காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தியது தெரிய வந்தது இதனை அடுத்து குட்கா கடத்திய வாலிபர் விஜய் (25) கைது செய்து காரில் இருந்த 650 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்
