இராசிபுரம் ஆக,13_
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இங்குள்ள மங்களபுரம் முதல் உரம்பு செல்லும் சாலையில் சில இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர். எனவே பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பல பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியின் கவனம் அரசின் கவனத்திற்கு சென்றது.மேலும் இதனைத் தொடர்ந்து இன்று(12.08.2023) நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட அத்தி மரத்துகுட்டை பகுதியில் சாலையோரம் நெடுஞ்சாலைத் துறையினர் பிரச்சினைக்குரிய தனியார் ஆக்கிரமிப்பிடம் இருந்து அரசு நிலத்தை மீட்டனர். மேலும் மங்களபுரம் பகுதியில் இருந்து உரம்பு செல்லும் சாலை வரை ஆக்கிரமிப்பு பகுதிகளைஅடுத்தடுத்து அகற்றுவதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். நெடுஞ்சாலை துறையினரின்இந்த நடவடிக்கைகாரணமாக இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

