*டிசம்பர் 22, 1851*
அப்போதைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரூர்கிக்கும் (Roorkee) பிரன் காலியர் (Piran Kaliyar) என்ற ஊருக்கும் இடையில் ஓட்டப்பட்டது. இந்தியாவின் முதல் ரயில் வண்டியும் இதுதான்.
அதற்கு இரண்டு ஆண்டுகள் பின்னர் தான் பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் விடப்பட்டது.
1838-ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட ஏவ்ரி டிசைன் ரோட்டரி இன்ஜின் இந்தப் பாதையில் ஓட்டப்பட்டது. அவ்வாறு முதலில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்கு – சாலை போடத் தேவையான சரளைக் கற்கள் ஆகும். ஓடிய தூரம் 10 மைல்கள்.

