விராலிமலையில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பேராம்பூர் கிராம நிர்வாக அலுவலராக ஜான் அருளப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மலம்பட்டியை சேர்ந்த அருளானந்த் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக ரூ.6000 லஞ்சம் வாங்கியபோது புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

