*குறும்பு செய்த சிறுவனை வெயிலில் கட்டி வைத்த சித்தி*
டெல்லி அலிப்பூர் பகுதியில் கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு ஐந்து வயது சிறுவன் செய்த சிறு குறும்பிற்காக, அவனது சித்தி அந்தச் சிறுவனின் கை மற்றும் கால்களைக் கட்டி, கொளுத்தும் வெயிலில் மொட்டை மாடியில் கிடக்க விட்டுள்ளார். . அந்தப் பிஞ்சு குழந்தை சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தாலும் வலியாலும் துடித்துக் கொண்டிருந்தது.
“அம்மா… அம்மா…” என்று கதறியும் அந்தப் பெண்ணின் கல்மனம் கரையவில்லை என்பதுதான் இதில் உச்சக்கட்ட வேதனை.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட அந்தப் பெண் மீது சிறார் நீதிச் சட்டத்தின் (Juvenile Justice Act) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

