*இன்றைய தலைப்புச் செய்திகள்!*

முதலமைச்சரை ஒருமையில் பேசியதாக கைதான அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு. அரசு தரப்பின் வாதங்களை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு.

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு புகார். தவெக-வில் சேரச் சொல்லி போலீசார் மூலம் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு.

தவெக அரசின் எந்த மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டேன் என அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம். விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோம் எனவும் சவால்.

சி.விஜயபாஸ்கர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தவெகவினருடன் திடீர் ஆலோசனை. தான் அதிமுகவில்
இருக்கிறேனா? என தெரியவில்லை என பரபரப்பு பேட்டி.

சி.விஜயபாஸ்கர் போன்றோரின் ராஜினாமா அப்பட்டமான சுயநலம் என தமிழிசை விமர்சனம். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் எனவும் காட்டம்.

புதுச்சேரியில் சகோதரரை வீடுபுகுந்து தாக்கியதாக தவெக அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்கு. இன்று நேரில் ஆஜராக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு.

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைக்கான சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு. டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக திமுக எம்.பி. வில்சன் தகவல்..

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம். சிபிஐ. விசாரணை கோரி ராஷ்ட்ரிய ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.

கால்பந்து உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது எகிப்து. பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி.

கால்பந்து உலகக்கோப்பையில் கேப் வெர்டே அணியை வீழ்த்தியது அர்ஜென்டினா. 3 – 2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 14 =

You missed