
*வரலாற்றில் இன்று*
*05 ஜூலை 2026-ஞாயிறு*
*========================*
328 : ருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் நடுவில் டானூப் ஆற்றின் மீது பாலம் கட்டப்பட்டது.
1610 : நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை 39 பேர்களுடன் பிரிஸ்டலில் இருந்து ஜான் கை கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1687 : ஐசக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிபியா மேத்மாட்டிகா எனும் நுண்கணித நூலை வெளியிட்டார்.
1770 : ரஷ்யாவிற்கும், ஒட்டோமான் பேரரசுக்கும் நடுவில் செஸ்மா என்ற இடத்தில் போர் நடைபெற்றது.
1807 : புவெனஸ் அயர்ஸில் பிரிட்டன் படையினரின் இரண்டாவது ஊடுருவலை உள்ளூர் துணை ராணுவத்தினர் தடுத்தனர்.
1809 : நெப்போலியப் போர்களின் மிகப்பெரும் போர் பிரான்சுக்கும் ஆஸ்திரியாவுக்கும் இடையே வாக்ரம் என்ற இடத்தில் நடைபெற்றது.
1811 : வெனிசுலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1856 : இந்தியர்களாலேயே உருவான முதல் டெக்ஸ்டைல் மில் மும்பையில் நிறுவப்பட்டது.
(இந்தியாவின் முதல் டெக்ஸ்டைல் மில் பிரிட்டிஷாரால் 1817 ல் நிறுவப்பட்டது.)
1875 : மிகப் பெரிய ஆலமரத்தின் கீழ் மும்பையில் உள்ள சில புரோக்கர்களால் இந்தியாவின் முதல் ஸ்டாக் எக்சேஞ்ச் ஆக பம்பாய் ஸ்டாக் எக்சேஞ்ச் உருவானது.
1884 : ஜெர்மனி கேமரூனை ஆக்கிரமித்தது.
1900 : ஆஸ்திரேலிய பொதுநலவாய சட்டம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1940 : இரண்டாம் உலகப்போர் :- பிரிட்டனும், பிரான்சும் தூதரக உறவைத் துண்டித்தன.
1941 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனிப் படையினர் தினேப்பர் ஆற்றை அடைந்தனர்.
1943 : இரண்டாம் உலகப் போர்:- ஜெர்மனிப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் கூர்ஸ்க் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
1945 : இரண்டாம் உலகப்போர் :- பிலிப்பைன்ஸின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
1946 : பாரிஸில் லூயிஸ் ரியர்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட பிகினி எனும் நீச்சல் உடை பேஷன் ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1950 : கொரியப் போர் :- அமெரிக்கப் படைகளுக்கும் வடகொரியப் படைகளுக்கும் நடுவில் முதலாவது மோதல் ஆரம்பமானது.
யூதர்கள் அனைவரும் இஸ்ரேலில் குடியேற அனுமதி அளித்த சட்டம் இஸ்ரேலில் கொண்டுவரப்பட்டது.
1954 : பிபிசி தன் முதல் தொலைக்காட்சிச் செய்தியை ஒளிபரப்பியது.
1962 : பிரான்ஸிடமிருந்து அல்ஜீரியா விடுதலை அடைந்தது.
1971 : அமெரிக்காவில் வாக்களிக்கும் வயது வரம்பு 21 லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.
1975 : விம்பிள்டன் கோப்பையை வென்ற முதலாவது கறுப்பினத்தவர் என்ற பெருமையை ஆர்தர் ஆஷ் பெற்றார்.
போர்ச்சுகலிடம் இருந்து கேப் வர்டி விடுதலை அடைந்தது.
1977 : பாகிஸ்தானில் ஏற்பட்ட ராணுவப் புரட்சியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோ பதவி இழந்தார்.
1980 : ஸ்வீடனைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பியார்ன் போர்டி தொடர்ச்சியாக ஐந்தாவது தடவை விம்பிள்டன் கோப்பையை வென்று சாதனை படைத்தார்.
1987 : ஈழப் போர் :- விடுதலைப்புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் யாழ்ப்பாணம், நெல்லியடி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
1992 : இலங்கை, இயக்கச்சி எனுமிடத்தில் வை-8 விமானம் விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 : குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டி, டோலி என்ற ஆடு ஸ்காட்லாந்தில் பிறந்தது.
1997 : ஈழப் போர் :- இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரை, திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2004 : இந்தோனேஷியாவில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
2009 : சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தலைநகர் உரும்கியில் கலவரங்கள் வெடித்தன.
2012 : லண்டனில் உள்ள தி ஷார்ட் 310 மீட்டர் உயரத்துடன் ஐரோப்பாவின் மிக உயரமான கட்டிடமாக திறக்கப்பட்டது.
2016 : யூனோ விண்கலம் வியாழன் கோளை அடைந்து தனது 20 மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.
