
*🔥 மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு.*
மதுரை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என தமிழ்நாடு அரசுக்கு மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் தகவல்.
மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை – மத்திய அரசு.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என மத்திய அரசு யோசனை.
திமுக ஆட்சியில் முன்மொழிந்த மெட்ரோ ரயில் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் நிராகரித்தது மத்திய அரசு.
மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
