போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது .இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் தலைமை தாங்கினார் ,பள்ளி ஆண்டி டிரக்ஸ் கிளப் பொறுப்பாளர் கணேசன் ஆசிரியர் வரவேற்புரை நல்கினார் .பரமத்தி சரக காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் அவர்கள் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், தவறான பழக்க வழக்கங்களில் நபர்களோடு சேர்க்கை வைத்தல் கூடாது, மன நலம் உடல் நலம் காக்க நன்கு விளையாட வேண்டும் ,நன்கு படிக்க வேண்டும் என சிறப்புரை ஆற்றினார் .பசுமை தில்லை சிவக்குமார் அவர்கள் கருத்துரை ஆற்றுகையில் எதிர்கால இந்தியா வளமான தமிழகம் வலிமை யான பாரதம் உங்கள் கையில் ,உங்களை மன கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொண்டு இலக்கை நோக்கி ஆட்சியராகவோ காவல் கண்காணிப்பாராகவோ வருதல், அதற்கான பயிற்சியும் முயற்சியும் தேவை எனவும் ,திருக்குறளை 1330 குறளை படிக்க வேண்டும் பொருளுடன் உணர்ந்து படித்தல் வேண்டும் என பேசி திருக்குறள் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.
விழாவில் உடற்கல்வி ஆசிரியர் பண்ணீர் செல்வம் நன்றியுரை ஆற்றினார் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டு போதை இல்லா தமிழகம் உருவாகிட உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

