ஏப்ரல் 24,
சச்சின் டெண்டுல்கர்
(Sachin Tendulkar)

உலகப் புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி மும்பையில் பிறந்தார்.

இவர் முதன்முதலாக 15வது வயதில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.

டெஸ்ட் போட்டியில் 10க்கும் மேலும், ஒருநாள் போட்டியில் 50க்கும் மேலும் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மேலும் பல தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

உலக கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். 2012ம் ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ம் ஆண்டு இவரது பிளேயிங் இட் மை வே என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, பாரத ரத்னா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கௌரவ கேப்டன் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 5 =

You missed