🇮🇳இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
👉இவன் NH-44 தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் சிசிடிவி கேமராவை பொருத்தி, அதன் மூலம் இந்திய ராணுவ வாகனங்கள் மற்றும் வீரர்களின் நடமாட்டங்களை ரகசியமாக உளவு பார்த்துள்ளான். இதற்காக இவருக்கு துபாயைச் சேர்ந்த ஒரு கையாள் மூலம் ₹40,000 பணமும், உளவு பார்ப்பதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
👉தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த உளவு வலைப்பின்னலை போலீஸார் தற்போது வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

