
மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் பகுதி வடக்கு இடைய பட்டியை சேர்ந்த திமுக பிரமுகர் நாகராஜ் மற்றும் அவரது மகன்கள் மூலம் அரசு அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மண் அள்ளும் கால அவகாசம் முடிந்த நிலையில், தொடர்ந்து கிராவல் மண் எடுத்து வந்துள்ளனர். இதனையறிந்த புத்தாநத்தம் விஏஓ சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக கிராவல் மண் கடத்தலின் திமுக பிரமுகர் நாகராஜின் மகன் விஏஓ
சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது விஏஓ சரவணன், மண் எடுத்து வாகனங்களை இயக்கும்போது எனக்கு தகவல் சொல்லுங்க, எனக்கு மேல் உள்ள அதிகாரிங்க கண்காணிக்கிறாங்க… இது எனக்கு பிரச்சனையாகி விடும். இதை பிரச்சினையாக்க விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லிட்டு செய்யுங்க. எனக்கு மாதாமாதம் ரூ.50 ஆயிரம் குடுங்க. இப்ப மட்டும் ஏதாவது பாத்து செய்யுங்க என்கிறார். அதற்கு திமுக பிரமுகரின் மகன், விரைவில் கிராவல் மண் எடுக்க அனுமதி பெற்று விடுவோம், நீங்கள் கேட்கும் தொகை மிக அதிகமாக இருக்கிறது அவ்வளவு கொடுக்க முடியாது என்று வா பேசுகிறார். அதற்கு விஏஓ, மாதம் 20 ஆயிரம் கொடுத்து விடுங்கள் என்று பேசுகிறார்.
பலரும் தற்போது பொறுப்பேற்றுள்ள த. வெ.க.அரச லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீத கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல லஞ்சம் கேட்கும் விஏஓ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்
